Tuesday, August 2, 2011

செல்போன் பயனாளிகளுக்கான ஒரு திகில் ரிப்போர்ட் 

    ஆரம்ப காலங்களில்தான் செல்போனிற்கான செலவுகள் அதிகமாக இருந்தன. காலப்போக்கில் அதிகப்படியான போட்டியால் செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு வாடிக்கையாளர்களை கவருவதற்காக கால் காஸ்ட்-ஐ குறைத்தும், சில நிறுவனங்கள் இலவசமாகவும் சேவைகளை வழங்கின.

இதனால் ஒரு வாடிக்கையாளர்  இரு செல்போன்களை பயன்படுத்தும் அளவிற்கு அதன்மீது மோகம் ஏற்பட்டது. செல்போன் இல்லையென்றால் சாப்பாடே இறங்காது என்ற நிலை தற்போது.

ஆனால்  தற்பொழுது நாமே உணராமல் சேவை நிறுவனங்களால் நாம் சுரண்டப்பட்டுக்கொண்டிருக்கிறோம். இதற்குமுன் ரூ.10 க்கு recharge செய்தால் Rs. 7 add ஆகும். தற்பொழுது டீலர்களுக்கான கமிசன் தொகையை சேவை நிறுவனங்கள் குறைத்ததால் strike நடந்தது. ஆனாலும் சேவை நிறுவனங்கள் அதற்கு மசியவில்லை விளைவு...

தற்பொழுது டீலர்களே recharge ற்கான விலையை நிர்ணயம் செய்கின்றனர். அவர்களிடம் Rs. 10 ற்கான கார்டின் விலை Rs. 11, அதேபோல Rs. 20 - Rs.22, Rs.30 - Rs.33...............................Rs.100-Rs.110. என்ன கொடும சார் இது!

நாம் Rs. 10 ற்கு கார்டு போட்டால் Rs. 6 add ஆகும். கார்டின் விலை 11 ரூபாய். ஆகமொத்தம் நமது இழப்பு 11 ரூபாய்க்கு 5 ரூபாய். கிட்டத்தட்ட பாதிக்கு பாதி. நாமென்ன மடையர்களா?..நம்மை வைத்து இவ்வளவு வருமானத்தை சேவை நிறுவனங்கள் பெறுகின்றன.

அப்படியென்றால் ஒருநாளைக்கு 100 வாடிக்கையாளர் recharge செய்வதாகக்கொண்டால் இதன்மூலம் டீலர்களுக்கு Rs.110 (Rs.1.10) மற்றும் சேவை நிறுவனத்திற்கு Rs.400 (Rs. 4 ) ம் வருமானமாக கிடைக்கிறது.

* இன்றைய நிலையில் தமிழ் நாட்டில் மட்டும் சராசரியாக 5 கோடிக்குமேலாக வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். நாளொன்றுக்கு ஒரு கோடிக்கும் மேற்ப்பட்ட வாடிக்கையாளர்கள் recharge செய்கின்றனர்.

ஆக நீங்களே கணக்கிட்டுக்கொள்ளுங்கள் நாம் நம்மை அறியாமல் எவ்வளவு வருமானத்தை இழக்கிறோமேன்று. நம் கண்முன்னே இவ்வளவு பணம் வெட்டியாக மற்றவர்களின் பயன்பாடிற்கு விட்டுவிட்டு...அரசியல் வாதிகளின் ஊழலை மட்டுமே நம்மிடமிருந்து கொள்ளையடித்ததாக எண்ணிக்கொண்டு இருப்பது முட்டாள் தனமில்லையா? நம் கையிலிருந்து நம் கண்முன்னே சேவை நிறுவனங்களுக்கு அளிக்கும் பணம் நமதில்லையா?


சிந்தியுங்கள் நண்பர்களே!
இதுக்கெல்லாம் யார் கரணம்..நாம்தான்..தகவல் தொடர்பில் வளர்ச்சி என்ற பெயரில் எந்நேரமும் மூன்றாவது காதாக ஒரு ஒட்டுவாரொட்டியாக நமது மூளையை மலுங்கசெய்து எண்ணற்ற நோய்களுக்கு ஆளாக்கும் செல்போனை எந்நேரமும் பேசிக்கொண்டும், குறுஞ்செய்தி அனுப்பியும் நமது வருமானத்தை வீணடிக்கின்றோம். சிந்தியுங்கள்.

* நாம் நினைத்தால் இது மாறும். சேவை நிறுவனங்கள் தங்களது இந்த போக்கை மாற்றிக்கொள்ளும் அளவிற்கு நமது நடவடிக்கைகளும் செல்போன் பயன்பாடும் இருக்கவேண்டும்.

* இனிமேல் சரியாக பதிலளிக்காத  சேவை நிறுவனங்களிலிருந்து பிற நிறுவனங்களுக்கு மாறுங்கள். அதிகமாக செல்போன் உபயோகிப்பதை தவிருங்கள். தேவையில்லாமல் கால் செய்வதையும் மிஸ்டு கால் விடுவதையும் தவிருங்கள்.

* கூடுமானளவிற்கு குறுஞ்செய்தியும் வேண்டாம். அவசியமெனில் கால் செய்யாமல் குறுஞ்செய்தியால் தொடர்புகொள்ளுங்கள்.

* FULL TALK TIME OFFER  ஐ மட்டும் பயன்படுத்துங்கள். கார்டு வாங்கி  பயன்படுத்தாதீர்கள்.

* ஒருநாளைக்கு 30 நிமிடத்திற்கு மேல் செல்போன் மூலம் பேசுபவர்களுக்கு மூலையில் புற்று நோய் வருவதற்கு அதிக வாய்ப்புகள் கண்டிப்பாக உண்டு என்று மருத்துவ உலகம் எச்சரித்து வருகிறது. 

* இதன் விளைவை அறியாமல் இருந்தால் ஒருநாள் நம் வாழ்வு கண்டிப்பாக நாசம்தான். இது நமது சந்ததியினரையும் பாதிக்கும்..இது தேவையா சிந்தியுங்கள் நண்பர்களே.

4 comments:

  1. ரொம்ப பயப்படுத்தறீங்களே சார்.

    ReplyDelete
  2. நீங்க Full talk time ல மட்டும் recharge பண்ணுங்க... கார்டு use பண்றது உங்க தப்பு. அதுக்கு செல் போன் நிறுவனங்கள குறை சொல்லாதீங்க.

    ReplyDelete
  3. எனக்கு அந்த பிரச்சினை இல்லை ஏன்னா நான் கம்பெனி மொபைல் பயன்படுதுரன் பில்
    எவ்வளவு வந்தாலும் கம்பெனி கட்டிடும்...

    ReplyDelete